கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே


கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே
x

கடந்த 2023-ம் ஆண்டு கோடைவிடுமுறையில் இந்தியா ழுழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 369 சேவைகள் இயக்கப்பட்டன.

சென்னை,

தெற்கு ரெயில்வெ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடை விடுமுறையையொட்டி பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நாடு முழுவதும் 9 ஆயிரத்து 111 ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன.

அந்த வகையில், தெற்கு ரெயில்வே சார்பில் 19 சிறப்பு ரெயில்கள் 239 சேவைகளாக இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரெயில்கள் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து தெற்கு ரெயில்வே மூலம் கர்நாடகா, ராஜஸ்தான், பீகார், டெல்லி, மேற்கு வங்காளம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. மேலும் சில சிறப்பு ரெயில்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகின்றன.

அதன்படி சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல, கன்னியாகுமரி, நெல்லை, திருச்சி மற்றும் தூத்துக்குடி போன்ற இடங்களுக்கு பயணிகளின் வசதிக்காக தேர்தலையொட்டி சிறப்பு ரெயில்களையும் அறிவித்துள்ளது. மேலும், இதைத்தவிர பல புறநகர் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2023-ம் ஆண்டு கோடைவிடுமுறையில் இந்தியா ழுழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 369 சேவைகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 2 ஆயிரத்து 742 சேவைகள் இயக்கப்பட உள்ளது.கோடை காலங்களில் ரெயில் நிலையங்களில் குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய மண்டல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து முக்கியமான ரெயில் நிலையங்களில் விரிவான கட்டுப்படுத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாகவும் பயணிகள் டிக்கெட் பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story