கஞ்சா விற்ற 2 பேர் கைது
தஞ்சையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
தஞ்சாவூர்
தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் கோவில் ரவுண்டானா அருகே கஞ்சா விற்கப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகம் படும்வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கொண்டிராஜபாளையம் பகுதியை சேர்ந்த தனபால் மகன் சிவக்குமார் (வயது 24), திருவையாறு கண்டியூரை சேர்ந்த வெங்கடேஷ் மகன் ஆகாஷ் சண்முகம் (20) என்பதும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் தஞ்சை கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார், ஆகாஷ் சண்முகம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story