டீக்கடையில் 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது


டீக்கடையில் 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது
x

டீக்கடையில் 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

திருச்சி தில்லை நகர், தென்னூர் அண்ணா நகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் தில்லை நகர் போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சோதனையிட்டனர். இதில் அண்ணா நகரைச் சேர்ந்த சையது அலி (வயது 47) என்பவரது டீக்கடையில் 20 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது அலியை கைது செய்தனர்.


Next Story