கலந்தாய்வில் கலந்து கொண்ட இரட்டை சகோதரர்கள்
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் ஹரி விஷ்ணுவும், ஹரி விக்னேசும் நேற்று என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.
சென்னை,
ஊத்துக்குளி விகாஷ் வித்யாலயா பள்ளியில் படித்த இருவரும் எப்படி ஒரே மாதிரி தோற்றத்தில் இருக்கிறார்களோ? அதேபோல், 2 பேரின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண்ணும் 493. பிளஸ்–2 வகுப்பில் ஹரிவிஷ்ணு 1,191 மதிப்பெண்ணும், ஹரிவிக்னேஷ் 1,186 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் என்ஜினீயரிங் கலந்தாய்வில் நேற்று கலந்து கொண்டு கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பிரிவை தேர்ந்து எடுத்தனர். இது மற்ற மாணவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story