ஜெயலலிதா முதலமைச்சராக ம.நடராஜன் தான் காரணம் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா


ஜெயலலிதா முதலமைச்சராக ம.நடராஜன் தான் காரணம்  ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா
x
தினத்தந்தி 20 March 2018 6:01 AM GMT (Updated: 20 March 2018 6:01 AM GMT)

ஜெயலலிதா முதலமைச்சராக ம.நடராஜன் தான் காரணம்,அஞ்சலி செலுத்திய பின் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா கூறினார். #Chandralekha #RIPNatarajan

சென்னை

சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ம.நடராஜன் உடலுக்கு, கி.வீரமணி, ஸ்டாலின்,வைகோ, துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, எ.வ.வேலு, கராத்தே தியாகராஜன், நாஞ்சில் சம்பத், ராஜமாணிக்கம், வைரமுத்து, பாரதிராஜா, கலைப்புலி தாணு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறும் போது  ஜெயலலிதா முதலமைச்சராக ம.நடராஜன் தான் காரணம் என கூறினார்.

அஞ்சலி செலுத்திய பின் மு.க.ஸ்டாலின் கூறியதாவது;-

திராவிட இயக்கத்தின் மீது அளவுகடந்த பற்று கொண்டவர் ம.நடராஜன். தொடக்க காலத்தில், திமுகவுக்கு பெரும் பங்காற்றியவர் ம.நடராஜன் என கூறினார்.

நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியதாவது:-

நடராஜனின் மறைவு அவரது குடும்பத்திற்கு, திராவிட இயக்கங்களுக்கு பேரிழப்பு. நடராஜனின் நினைவைப் போற்றும் வகையில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்றும் இருக்கும்  என கூறினார்.

Next Story