கூட்டத்தைக் கலைக்கிறோம் என்ற பெயரில் குறி வைத்து சுட்டுத்தள்ளியிருக்கிறது காவல்துறை ஸ்டாலின் கண்டனம்


கூட்டத்தைக் கலைக்கிறோம் என்ற பெயரில் குறி வைத்து சுட்டுத்தள்ளியிருக்கிறது காவல்துறை ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 23 May 2018 1:12 PM GMT (Updated: 23 May 2018 1:12 PM GMT)

கூட்டத்தைக் கலைக்கிறோம் என்ற பெயரில் குறி வைத்து காவல்துறை சுட்டுத்தள்ளியிருக்கிறது என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். #SterliteProtest #MKStalin


சென்னை, 


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று நடைபெற்ற கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் கலவரமாக வெடித்தது. அப்போது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் ஆறுதல் கூறினார். 

இதற்கு பின்னர் அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், தோட்டாக்களால் துளைக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை மருத்துவமனையில் பார்த்தபோது, இதயத்தை துளைத்தெடுத்த வேதனையிலிருந்து இன்னும் மீள முடியவில்லை. இறந்தவர்களும் படுகாயமடைந்தவர்களும் கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. கூட்டத்தைக் கலைக்கிறோம் என்ற பெயரில் குறி வைத்து சுட்டுத்தள்ளியிருக்கிறது காவல்துறை. தன் சொந்த மாநிலத்து மக்களையே நர வேட்டை ஆடியள்ளது ஆளத்தகுதியற்ற எடப்பாடி அரசு. நீதியும் நியாயமும் கிடைக்க-குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட நாம் உறுதியாக போராடுவோம் என கூறிஉள்ளார். 


Next Story