தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மு.க. ஸ்டாலின் நேரில் பிறந்த நாள் வாழ்த்து


தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மு.க. ஸ்டாலின் நேரில் பிறந்த நாள் வாழ்த்து
x
தினத்தந்தி 3 Jun 2018 6:23 AM GMT (Updated: 2018-06-03T11:53:32+05:30)

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறி ஆசி பெற்றார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.கருணாநிதி ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளை தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். தற்போது அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்களை தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று தன்னுடைய 95வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.  இதற்காக அவரது இல்லம் அமைந்துள்ள கோபாலபுரத்தில் தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவிக்க குவிந்து உள்ளனர்.  அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இன்று டுவிட்டர் வழியே தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து கொண்டனர்.

இந்நிலையில், கோபாலபுரத்திற்கு நேரில் சென்ற மு.க. ஸ்டாலின் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்து கூறி ஆசி பெற்றார்.

Next Story