மாநில செய்திகள்

டேங்கர் லாரி வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Banned the struggle to Tanker lorry stop working

டேங்கர் லாரி வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு

டேங்கர் லாரி வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு
பெட்ரோல், டீசல் டேங்கர் லாரி வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

சென்னையை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் இந்துஸ்தான் பெட்ரோலிய கழகத்தின் எண்ணெய் கிடங்கு உள்ளது. இங்கிருந்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்துக்கும் பெட்ரோல், டீசல் சப்ளை செய்ய தனியார் டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன.

இந்த ஒப்பந்தம் வரும் செப்டம்பர் 30-ந் தேதியுடன் முடிவடைவதால் அடுத்த 5 ஆண்டுக்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன.

அதில் வங்கி உத்தரவாத தொகையை குறைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 9-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், இந்துஸ்தான் பெட்ரோலிய கழகத்தின் துணை பொதுமேலாளர் நாராயணராவ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி டி.ராஜா நேற்று விசாரித்தார். அப்போது புதிய ஒப்பந்த விதிமுறைகள் எந்த விதத்திலும் தற்போதுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கிற்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். 


தொடர்புடைய செய்திகள்

1. கலெக்டர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.
2. தஞ்சை மாவட்டத்தில் 13-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் மீன்கள் விலை கடும் உயர்வு
தஞ்சை மாவட்டத்தில் 13-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
3. படகுகளை இலங்கை அரசுடைமையாக்கும் சட்டத்தை எதிர்த்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
கடற்படையால் பிடிக்கப்படும் படகுகளை இலங்கை அரசுடைமையாக்கும் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர்.
4. சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகு மீனவர்கள் 5–வது நாளாக வேலை நிறுத்தம் 3 ஆயிரம் பேர் வேலை இழப்பு
சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகு மீனவர்கள் 5–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 3 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.
5. சட்டவிரோத கோவில்களை இடிப்பதில் தாமதம் ஏன்? - மும்பை ஐகோர்ட்டு
சட்டவிரோத கோவில்களை இடிப்பதில் தாமதம் ஏன்? என அரசிடம் மும்பை ஐகோர்ட்டு விளக்கம் கேட்டு உள்ளது.