சென்னை பட்டினப்பாக்கத்தில் கார் மோதி விபத்து; 2 பேர் உயிரிழப்பு


சென்னை பட்டினப்பாக்கத்தில் கார் மோதி விபத்து; 2 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 7 Aug 2018 5:15 AM GMT (Updated: 2018-08-07T10:45:52+05:30)

சென்னை பட்டினப்பாக்கத்தில் வழக்கறிஞர் ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

சென்னை,

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் எம்.ஆர்.சி. நகரில் வழக்கறிஞர் ரீகன் என்பவர் காரில் வந்துள்ளார். அவர் குடிபோதையில் காரை ஓட்டியுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கார் மோதி விபத்து ஏற்படுத்தியதில் 2 பேர் காயம், அடைந்தனர்.  அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதில் சிகிச்சை பலனின்றி 2 பேரும் உயிரிழந்தனர்.  அவர்கள் அமீர் ஜகான், செய்யது அபுதாஹிர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story