மாநில செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை + "||" + Security tightens ahead of independence day

சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு  பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை,

ஆகஸ்ட் 15-ல் (நாளை) இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைமைச்செயலகத்தை சுற்றிலும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னையில் பல இடங்களில் விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது.