பெட்ரோல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை, டீசல் விலை 8 காசுகள் குறைப்பு


பெட்ரோல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை, டீசல் விலை 8 காசுகள் குறைப்பு
x
தினத்தந்தி 14 Dec 2018 12:49 AM GMT (Updated: 14 Dec 2018 12:49 AM GMT)

பெட்ரோல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை டீசல் விலை 8 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டது.  அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக சரக்கு லாரி கட்டணம் உயர்ந்தது. ஷேர் ஆட்டோ கட்டணமும் அதிகரித்தது. தொடர் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் இறங்குமுகம் காணப்பட்டது.

ரூ.86-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் விலை படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82-க்கு விற்பனை ஆனது. 80 ரூபாயை தாண்டி விற்பனையான டீசலும் ரூ.68.26 என்ற அளவுக்கு குறைந்தது.பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது, வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலாய் அமைந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 11-ந் தேதி வெளியாகின.
அதைத் தொடர்ந்து, 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாகத்தான் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது என்றும், இப்போது முடிவுகள் வெளியாகி விட்டதால் அவற்றின் விலை உயரக்கூடும் என்றும் பேசப்பட்டது.

இந்த நிலையில், சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் நேற்று 2 மாதங்களுக்கு பிறகு பெட்ரோல் விலை திடீரென உயர்ந்தது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து, ரூ.72.94-க்கு விற்பனை ஆனது. டீசல் விலையில் மாற்றம் இல்லை. நேற்று முன்தினம் நிலவிய விலைக்குத்தான் நேற்றும் விற்பனை செய்யப்பட்டன.

டீசல் விலையில் மாறம் இல்லை

இந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையான ரூ.72.94-க்கே விற்பனையாகிறது. டீசல் விலை 8 காசுகள் குறைந்து ரூ.68.18-க்கு விற்பனையாகிறது. 


Next Story