மாநில செய்திகள்

விதிமீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின்சாரம், குடிநீரை துண்டிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு + "||" + Cut off electricity, drinking water to illegally constructed buildings; Court order

விதிமீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின்சாரம், குடிநீரை துண்டிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

விதிமீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின்சாரம், குடிநீரை துண்டிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
விதிமீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை உடனடியாக துண்டிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
சென்னை,

சென்னை மண்ணடியில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்தின் கட்டுமான பணிகளை நிறுத்தும்படி மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கட்டிட உரிமையாளர் மெஹ்ராஜ் பேகம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்திய நாதன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  இதில், விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களின் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விதிகளை மீறுபவர்களை நீதிமன்றம் பாதுகாக்காது என கூறிய நீதிபதிகள், மாநகராட்சி அதிகாரிகளின் உதவி இல்லாமல் இது போன்ற விதிமீறல்களில் யாரும் ஈடுபட முடியாது என குறிப்பிட்டனர்.

நேர்மையற்ற அதிகாரிகள் மீது பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் சொத்து விபரங்களை அவ்வப்போது இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணை ஏப்ரல் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கோடநாடு விவகாரம்; மனோஜ், சயானை திங்கட்கிழமை வரை கைது செய்ய கூடாது: உயர் நீதிமன்றம்
கோடநாடு விவகாரத்தில் மனோஜ், சயானை திங்கட்கிழமை வரை கைது செய்ய கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
2. ஓட்டப்பிடாரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
ஓட்டப்பிடாரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
3. வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி
வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பரிதாபமாக இறந்தார்.
4. திண்டிவனம் அருகே, மின்சாரம் தாக்கி விவசாயி பலி
திண்டிவனம் அருகே ஆடுகளுக்கு தழை பறித்தபோது விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
5. 'இளையராஜா 75' நிகழ்ச்சியை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி
'இளையராஜா 75' நிகழ்ச்சியை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.