பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கு; அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை


பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கு; அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 7 Jan 2019 10:36 AM GMT (Updated: 7 Jan 2019 10:36 AM GMT)

பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதுள்ள வழக்குகளை விசாரணை மேற்கொள்வதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு உள்ளது.  இந்த நீதிமன்றத்தில் இன்று நடந்த வழக்கொன்றில் தமிழக அமைச்சருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பேருந்து ஒன்றின் மீது கடந்த 1998ம் ஆண்டு கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் தமிழக விளையாட்டு துறை அமைச்சராக உள்ள பாலகிருஷ்ண ரெட்டியை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அவரது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் சூழ்நிலை உள்ளது.  இந்த சிறை தண்டனைக்கு பின்பும் 6 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது.  இதனால் இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

Next Story