மாநில செய்திகள்

தமிழகத்தில் மக்களவை தேர்தலை முதல் கட்டத்தில் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. கோரிக்கை + "||" + Lok Sabha elections to be held as 1st phase in TN; AIADMK

தமிழகத்தில் மக்களவை தேர்தலை முதல் கட்டத்தில் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. கோரிக்கை

தமிழகத்தில் மக்களவை தேர்தலை முதல் கட்டத்தில் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. கோரிக்கை
தமிழகத்தில் மக்களவை தேர்தலை முதல் கட்டத்தில் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. கடிதம் வழியே கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்திற்கான மக்களவை தேர்தல் இந்த வருடம் நடைபெற உள்ளது.  இந்த தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும்பொழுது அது கோடை காலம் என்பதனால் பொதுமக்களுக்கு அதிக சிரமம் ஏற்படும்.

இதனை முன்னிட்டு தமிழகத்தில் மக்களவை தேர்தலை முதல் கட்டத்தில் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. கடிதம் எழுதியுள்ளது.

இதுபற்றி அக்கட்சியை சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் வேணுகோபால் எழுதியுள்ள கடிதத்தில் தேர்தல் நடைபெறக்கூடிய கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆம் ஆத்மி கட்சி பசுவை அரசியலாக்குகிறது; தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க பா.ஜ.க. முடிவு
ஆம் ஆத்மி கட்சி பசுவை அரசியலாக்குகிறது என பா.ஜ.க. இன்று குற்றச்சாட்டு கூறியுள்ளது.
2. மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிக்கப்படுவர்; கே.எஸ். அழகிரி
மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
3. மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் : தேர்தல் அதிகாரி
மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
4. மக்களவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு, கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டி
மக்களவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
5. மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற முடியாது - தேர்தல் ஆணையம்
மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.