பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் சென்னை வருகை திடீர் ரத்து


பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் சென்னை வருகை திடீர் ரத்து
x
தினத்தந்தி 19 Feb 2019 4:41 AM GMT (Updated: 19 Feb 2019 4:41 AM GMT)

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் இன்றைய சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்தி வருகின்றன. இதில் தி.மு.க–காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், அ.தி.மு.க.வின் நிலைப்பாடு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எனினும் அந்த கட்சி பா.ஜனதாவுடன் ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில் மத்திய மந்திரி பியூஸ் கோயலும் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்து அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து இந்த கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் முனைப்பில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்று  வருவதாக தகவல் வெளியானது.  இந்த பயணத்தின் போது,  முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அமித்ஷா சந்தித்து பேச இருப்பதாகவும்,  இந்த சந்திப்பின்போது, அ.தி.மு.க–பா.ஜனதா கூட்டணி இறுதி செய்யப்பட இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில், திடீர் திருப்பமாக அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அமித்ஷாவின் பயண திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மும்பையில் இருந்த அமித்ஷா அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டுசென்றுள்ளார். 

Next Story