இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கிறது; மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா? -உயர்நீதிமன்றம்


இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கிறது; மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா? -உயர்நீதிமன்றம்
x
தினத்தந்தி 19 March 2019 10:52 AM GMT (Updated: 19 March 2019 10:52 AM GMT)

அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதிக்கு உட்பட்ட  பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து பிரத்யேகமான தேர்தல் அறிக்கை வெளியிடவேண்டும் என்று தேர்தல் ஆணையம் அனைத்து வேட்பாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக பதிலளிக்காத 9 அரசியல் கட்சிகளுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகை  போர் விதவைகள் சங்கத்திற்கு இரண்டு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. 

இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்ற போது, அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர பெரும்பாலான கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியலையே ஊக்குவிப்பதாக தெரிவித்தனர். இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கிறது. இங்கு நடப்பது மக்கள் ஆட்சியா?  மன்னர் ஆட்சியா? என கேள்வி எழுப்பினர். அதன்பின்னர், நோட்டீஸ்களுக்கு பதில் அளிக்காத அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அபராதத்தை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்துவிட்டனர். 

Next Story