குடிநீர் பிரச்சினைக்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காணவில்லை : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு


குடிநீர் பிரச்சினைக்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காணவில்லை : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 Jun 2019 10:20 PM GMT (Updated: 15 Jun 2019 10:20 PM GMT)

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆலந்தூர், 

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பெண்களை பாதுகாக்கக்கூடிய எந்தவொரு செயல்பாட்டையும் அரசு செய்யவில்லை. மத்திய, மாநில அரசுகள் திணிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய விஷயங்களை தான் திணிக்கிறார்களே தவிர மக்களை பாதுகாக்கவும், பெண்களை பாதுகாக்கவும் எந்தவித அக்கறையும் இல்லாத சூழ்நிலை உள்ளது.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து அரசு சிந்திக்கவே இல்லை. எல்லா தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடிய வகையில் தண்ணீர் பிரச்சினை உள்ளது. தி.மு.க. ஆட்சியில் சென்னை மக்களுக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். ஆனால் இந்த அரசு அதை பற்றி சிந்திக்காமல் தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்பதால் அதை செயல்படுத்தாமல் பராமரிக்காமல் விட்டுவிட்டது. நீர் நிலைகளை சரியாக தூர்வாராமல் விட்டதால் தண்ணீர் பிரச்சினை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

Next Story