வேட்பு மனு விவகாரத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை- வைகோ


வேட்பு மனு விவகாரத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை- வைகோ
x
தினத்தந்தி 9 July 2019 12:53 PM IST (Updated: 9 July 2019 12:53 PM IST)
t-max-icont-min-icon

வேட்பு மனு விவகாரத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை என வேட்பு மனு ஏற்புக்கு பிறகு வைகோ உருக்கமான பேட்டி அளித்தார்.

சென்னை,

 வேட்பு மனு ஏற்புக்கு பிறகு வைகோ அளித்த உருக்கமான பேட்டி விவரம் வருமாறு:-

இந்தியா சுதந்திரம் பெற்ற உடன், தேச துரோக வழக்கில் ஒருவர் தண்டனை பெற்றார் என்றால் அது நான்தான். மத்திய அமைச்சர் பதவி 2 முறை தேடி வந்தும் அதை மறுத்தவன் நான். 

என் குடும்பத்தில் இருந்து யாரும் பதவிகளுக்கு வர மாட்டார்கள்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால்தான், மாநிலங்களவை தேர்தலில் போட்டி . என் தொண்டர்கள் மட்டுமே எனக்கு உயிர், எனக்கு பிடித்த இடம் தாயகம். என்னுடைய வேட்பு மனுவை ஏற்றுக்கொண்ட செய்தியால் என் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

வேட்பு மனு விவகாரத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை.  26 ஆண்டுகளாக கட்சியில், எந்த முடிவையும் தனித்து எடுத்ததில்லை.  பதவி பெற்றவர்கள்தான் மதிமுகவை விட்டு சென்றார்கள், லட்சியத்திற்காக யாரும் கட்சியைவிட்டு வெளியேறவில்லை.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழகம் ஆபத்துக்கு உள்ளாகி உள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் அப்பகுதி நச்சு பகுதி ஆகிவிடும்.  இந்திய நாடாளுமன்றத்தில் அணு உலைக்கு எதிராக குரல் எழுப்பியது நான்தான் என கூறினார்.

Next Story