மாநில செய்திகள்

விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளாக உள்ளது- மு.க ஸ்டாலின் + "||" + All notices issued under Rule 110 Is blank declarations MK Stalin

விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளாக உள்ளது- மு.க ஸ்டாலின்

விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளாக உள்ளது- மு.க ஸ்டாலின்
விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளாக உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
சென்னை

சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆளுநர் பதவி தேவையில்லை என்பதில் திமுக உறுதியாக உள்ளது. பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை என்னவாயிற்று என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் அட்டை என மத்திய அரசு வெறுப்பு அரசியலை உண்டாக்கி வருகிறது. விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளாக உள்ளது என கூறினார்.