தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்


தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்
x
தினத்தந்தி 20 July 2019 1:06 PM GMT (Updated: 20 July 2019 1:06 PM GMT)

தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி 2019 -20ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மக்களவைத் தேர்தல் நெருங்கியதால், பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பிறகு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமலேயே பேரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

தேர்தல் முடிந்த நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெறுவதற்காக, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்  ஜூன் 28-ம் தேதி தொடங்கியது.   28-ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடர் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ மஸ்தான் அதிக கேள்விகளை எழுப்பியதாக சபாநாயகர் தனபால் கூறியுள்ளார். மானியக் கோரிக்கை மீதான விவாதங்களில் 129 உறுப்பினர்கள் பேசினர். உறுப்பினர்கள் கேள்விகளுக்கு நினைவாற்றலுடன் அவ்வப்போது முதல்-மந்திரி பதில் அளித்தார். 

அதிகமாக பதில் அளித்ததில் முதல் இடம் வேலுமணி, 2-ம் இடம் தங்கமணி, 3-வது இடம் செங்கோட்டையன் பிடித்தனர் என்றார். மக்கள் நலம் சார்ந்த அறிவிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். அதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடமால் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

Next Story