மாநில செய்திகள்

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு + "||" + Rajinikanth and Kamal Haasan have been invited to participate in the inauguration of Karunanidhi Statue.

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: 

சென்னை கோடம்பாகத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா முரசொலி வளாகத்தில் வருகிற 7-ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.  விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார்.  உருவச்சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்.

இதில் பங்கேற்க பல்வேறு தலைவர்களுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் உருவச்சிலை திறப்பு விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார். மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் நன்றி கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ- கமல்ஹாசன் ஆவேசம்
அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ; அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவீட் செய்துள்ளார்.
2. சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல்
பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார்.
3. ‘இந்தியன் - 2’ படப்பிடிப்பில் கமல்ஹாசன்
கமல்ஹாசன் நடித்து 1996-ல் திரைக்கு வந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இந்தியன்-2 என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் படமாக்கி வருகிறார்.
4. தமிழக பா.ஜ.க. தலைவர் ரஜினிகாந்தா? அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு
தமிழக பா.ஜ.க. தலைவராக ரஜினிகாந்த் நியமிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
5. காஷ்மீர் விவகாரம்: ரஜினிகாந்த் கருத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு
காஷ்மீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் கருத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை