காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை மையம்


காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை மையம்
x
தினத்தந்தி 25 July 2019 8:03 AM GMT (Updated: 25 July 2019 8:03 AM GMT)

காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது.

தமிழகத்தில் வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு  உள்ளது என கூறினார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது:-

இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள  நிலையில்  வட மாநிலங்களில் கனமழை நீடிக்கும்.

அடுத்த 5 நாட்களுக்கு பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம்,  ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழை பெய்யும்.

கொங்கன் கோவா, மேற்கு மத்தியப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், கிழக்கு ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் தொடர் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் வரும் 27-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வரும் 29-ஆம் தேதி முதல் வட மாநிலங்களில் பருவமழையின் தீவிரம் மீண்டும் அதிகரிக்கும் என்றும், அசாம், மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தொடர் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தென்மேற்கு மத்திய அரபி கடலில் 40-50 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு  உள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். இதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

Next Story