பெட்ரோல் விலை குறைவு, டீசல் விலையில் மாற்றம் இல்லை


பெட்ரோல் விலை குறைவு, டீசல் விலையில் மாற்றம் இல்லை
x
தினத்தந்தி 26 July 2019 1:08 AM GMT (Updated: 26 July 2019 1:08 AM GMT)

பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.76.11 ஆக விற்பனையாகிறது.

சென்னை,

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணையித்து வருகின்றன. 

அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து 7 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.76.11 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.69.90 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.


Next Story