மொத்த முதலீட்டையும் தமிழகத்திற்கு கொண்டுவந்தால் முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு விழா -மு.க.ஸ்டாலின்


மொத்த முதலீட்டையும் தமிழகத்திற்கு கொண்டுவந்தால் முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு விழா -மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 5 Sep 2019 7:49 AM GMT (Updated: 5 Sep 2019 8:15 AM GMT)

மொத்த முதலீட்டையும் தமிழகத்திற்கு கொண்டுவந்தால் முதல்வர் பழனிசாமிக்கு திமுக பாராட்டு விழா நடத்த தயார் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

கோவை,

திமுக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பொறுத்தார் பூமி ஆள்வார், நாம் பொறுத்துக் கொண்டுள்ளோம். பாஜகவை  நாங்கள் தோற்கடிக்கவில்லை, மக்கள் தான் தோற்கடித்தனர்.

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் முதலீடு செய்தது. முதலீட்டாளர்கள் தமிழகம் வந்தால் திமுகவுக்கு மகிழ்ச்சிதான்.

கூறியபடி மொத்த முதலீட்டையும் தமிழகத்திற்கு கொண்டுவந்தால் முதல்வர் பழனிசாமிக்கு திமுக பாராட்டு விழா நடத்த தயார் என கூறினார்.

Next Story