மாநில செய்திகள்

சென்னை ஐகோர்ட்டிற்க்கு வெடிகுண்டு மிரட்டல் + "||" + Bomb threat to Chennai High Court

சென்னை ஐகோர்ட்டிற்க்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஐகோர்ட்டிற்க்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ஐகோர்ட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்பவர் தலைமை பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,

சென்னை ஐகோர்ட் பதிவாளருக்கு கடந்த 9-ம் தேதி கடிதம் ஒன்று வந்துள்ளது. காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்பவர் அந்த கடிதத்தை அனுப்பி இருகிறார். 

அதில்,  நானும் எனது மகனும் சேர்ந்து செப்டம்பர் 30-ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.  நாங்கள் ஒரு மாநிலத்தில் இல்லாமல் மாநிலம் விட்டு மாநிலம் பயணம் செய்வதாகவும், எனது செல்போன் நம்பரை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறேன் என்றும், அதனால் தன்னை தேட முயற்ச்சிக்க வேண்டாம், மேலும் நாங்கள் தடைசெய்யப்பட்ட அதாவது சர்வதேச காலிஸ்தான் ஆதரவு குழுவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

இது குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி சென்னை ஐகோர்ட் பதிவாளர் சென்னை காவல்துறை ஆணையருக்கும், மத்திய தொழில் பாதுகாப்புப்படைக்கும் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 

மேலும் இந்த கடிதம் டெல்லியில் ஒரு முகவரியிலிருந்து வந்துள்ளதால் டெல்லி போலீசாரை தமிழக போலீஸ் அணுகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜூன் 1 ஆம் தேதி முதல் கோர்ட்டில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை-பதிவுத்துறை சுற்றறிக்கை
ஜூன் 1 ஆம் தேதி முதல் கோர்ட்டில் இருந்தே காணொலி காட்சி மூலமாக வழக்குகளை விசாரிக்கும்படி நீதிபதிகளுக்கு பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
2. ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை முதல்வர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம்- சென்னை ஐகோர்ட்
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம் என்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
3. 8,888 சீருடைப் பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து
8,888 சீருடைப் பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
4. சசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை தான் - ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்
சசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை தான் என ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.
5. 8,888 பேருக்கான சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
8,888 பேருக்கான சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.