‘தமிழர்கள் கலாசாரத்தை மத்திய அரசு காக்க வேண்டும்’: மு.க ஸ்டாலின் பேட்டி


‘தமிழர்கள் கலாசாரத்தை மத்திய அரசு காக்க வேண்டும்’: மு.க ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 27 Sep 2019 7:36 AM GMT (Updated: 2019-09-27T13:38:49+05:30)

‘தமிழர்கள் கலாசாரத்தை மத்திய அரசு காக்க வேண்டும்’ என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

சிவகங்கை , 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடைபெற்றுவரும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை மு.க.ஸ்டாலின் இன்று  நேரில் ஆய்வு செய்தார். 

இதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க ஸ்டாலின் கூறியதாவது:- "இந்தியாவின் வரலாறு மேற்கிலிருந்து தொடங்க வேண்டும் என பலமுறை பல்வேறு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆனால், இந்திய வரலாறு கீழடியில் இருந்து தொடங்க வேண்டும் என்பது கீழடி அகழாய்வால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும். தமிழர்களின் கலாச்சாரத்தை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டும்”என்றார்.

Next Story