அ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்


அ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2019 7:29 AM GMT (Updated: 17 Oct 2019 7:29 AM GMT)

அ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

சென்னை

அ.தி.மு.க வின்  48-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில்,  எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கடந்த 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி அ.தி.மு.க.வைத் தொடங்கினார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 48-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்த அவர்கள், தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.

இந்த விழாவில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், முன்னணி நிர்வாகிகள் தம்பிதுரை, வைத்தியலிங்கம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Next Story