பாஜக நினைத்தால் ஒரு நிமிடத்தில் அதிமுக ஆட்சியை கலைத்துவிடும்! -ஸ்டாலின் பிரசாரம்


பாஜக நினைத்தால் ஒரு நிமிடத்தில் அதிமுக ஆட்சியை கலைத்துவிடும்! -ஸ்டாலின் பிரசாரம்
x
தினத்தந்தி 18 Oct 2019 6:45 AM GMT (Updated: 18 Oct 2019 6:45 AM GMT)

பாஜக நினைத்தால் ஒரு நிமிடத்தில் அதிமுக ஆட்சியை கலைத்துவிடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

நாங்குநேரி

விக்ரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட எழும் செம்பொன் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திண்ணை பிரசாரம் மேற்கொண்டு திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர் கூறியதாவது;-

முதியோர் உதவித்தொகை வழங்குவதில் அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் அனாதை குழுக்களாகி விட்டது.

திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகள் உண்மை. ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

தமிழகத்தில் கொலை கொள்ளை அதிகரித்து உள்ளது.

பாஜக நினைத்தால் ஒரு நிமிடத்தில் அதிமுக ஆட்சியை கலைத்துவிடும் என கூறினார்.

Next Story