மாநில செய்திகள்

அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக விஜயகாந்த் விக்கிரவாண்டியில் பிரசாரம் + "||" + Vijayakanth campaign vikravandi in support of AIADMK candidate

அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக விஜயகாந்த் விக்கிரவாண்டியில் பிரசாரம்

அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக விஜயகாந்த் விக்கிரவாண்டியில் பிரசாரம்
அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக விக்கிரவாண்டியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.
விழுப்புரம்,

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வருகிற 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வி. நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் எம்.ஆர். முத்தமிழ்செல்வனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டு உள்ளனர்.

அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந்த், அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து விக்கிரவாண்டியில் இன்று திடீர் பிரசாரம் மேற்கொண்டார். இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.  இந்நிலையில், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் விஜயகாந்த் ஈடுபட்டார்.

அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து, விக்கிரவாண்டி நகர பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட விஜயகாந்த், அனைவரும் இரட்டை இலைக்கு ஓட்டளியுங்கள் என காரில் அமர்ந்தபடியே கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நம்பிக்கை துரோகம் செய்த தி.மு.க.விற்கு பாடம் புகட்டுங்கள்; முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரம்
நம்பிக்கை துரோகம் செய்த தி.மு.க.விற்கு பாடம் புகட்டுங்கள் என முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரத்தில் பேசியுள்ளார்.
2. திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் அப்புறப்படுத்துவதாக குற்றஞ்சாட்டி, தரைக்கடை வியாபாரிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
3. “விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புகிறார்களே” மகன் விஜயபிரபாகரன் கண்ணீர்சிந்தி அழுதபடி பேசியதால் பரபரப்பு
விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புகிறார்களே என ஆம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அவரது மகன் விஜயபிரபாகரன் கண்ணீர் சிந்தி அழுதபடி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. விஜயகாந்த் 67-வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 67-வது பிறந்தநாள் விழா, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் விஜயகாந்த் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
5. மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி 5 ஒன்றியங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட அமைப்புக்குழு சார்பில் நடந்தது
மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி 5 ஒன்றியங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட அமைப்புக்குழு சார்பில் நடந்தது.