அரசு மருத்துவர்கள் போராட்டம்: நடவடிக்கைகளில் ஈடுபடுவது கொடுங்கோன்மை - மு.க.ஸ்டாலின்


அரசு மருத்துவர்கள் போராட்டம்:  நடவடிக்கைகளில் ஈடுபடுவது கொடுங்கோன்மை - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 31 Oct 2019 8:15 AM GMT (Updated: 31 Oct 2019 8:15 AM GMT)

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாகும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;- 

அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும்-அதிகாரிகளும், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வதுடன், பிரேக்-இன்-சர்வீஸ் &நன்னடத்தைச் சான்றிதழில் கைவைப்பது, பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கொடுங்கோன்மை!

மருத்துவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை காவல்துறை மூலம் ஒடுக்கிவிடலாம் என நினைக்காமல், நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாகும் என பதிவிட்டுள்ளார்.

Next Story