மாநில செய்திகள்

போக்குவரத்து காவல் அபராத ரசீதை தமிழில் மாற்றாவிட்டால் திமுக சார்பில் போராட்டம் - மு.க.ஸ்டாலின் + "||" + Traffic Police fine receipt If you change in Tamil On behalf of DMK Struggle MK Stalin

போக்குவரத்து காவல் அபராத ரசீதை தமிழில் மாற்றாவிட்டால் திமுக சார்பில் போராட்டம் - மு.க.ஸ்டாலின்

போக்குவரத்து காவல் அபராத ரசீதை தமிழில் மாற்றாவிட்டால் திமுக சார்பில் போராட்டம் - மு.க.ஸ்டாலின்
போக்குவரத்து காவல் அபராத ரசீதை தமிழில் மாற்றாவிட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை,

தமிழகத்தில், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் ரசீதை தமிழில் மாற்றாவிட்டால்  திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, போக்குவரத்து துறையில் அபராத கட்டணத்துக்காக வழங்கப்படும் ரசீது விவரங்கள் தமிழில் இல்லை என்று குற்றஞ்சாட்டினார். இதனை மாற்ற அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆங்கிலத்தில் உள்ள ரசீதை தமிழில் மாற்றாவிட்டால் திமுக சார்பில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.