திராவிட கருத்தியலை தி.மு.க. என்றும் பாதுகாக்கும் பாபா ராம்தேவுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு


திராவிட கருத்தியலை தி.மு.க. என்றும் பாதுகாக்கும் பாபா ராம்தேவுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
x
தினத்தந்தி 18 Nov 2019 8:48 PM IST (Updated: 18 Nov 2019 8:48 PM IST)
t-max-icont-min-icon

திராவிட கருத்தியலை தி.மு.க. என்றும் பாதுகாக்கும் பாபா ராம்தேவுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை, 

தந்தை பெரியார் பற்றிய பாபா ராம்தேவின் சர்ச்சை பேச்சு இந்திய அளவில் ‘டிரெண்டிங்’ ஆனது. அதன் அடிப்படையில் பாபா ராம்தேவுக்கு எதிராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துகள் வருமாறு:–

தந்தை பெரியார் மற்றும் எங்களது கொள்கைகள் மீது வலதுசாரி சக்திகளால் குறிவைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறேன். தந்தை பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடினார்.

 பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தார். சாதி முறைக்கு எதிராக பேசினார். ஆதிக்க சக்திகளுக்கு எதிரான திராவிட கருத்தியலை தி.மு.க. என்றும் பாதுகாக்கும்.இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Next Story