தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயமானது -முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்


தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயமானது  -முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 Nov 2019 8:31 AM GMT (Updated: 29 Nov 2019 8:31 AM GMT)

தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயமானது.

சென்னை,

தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், மக்கள்தொகை  அடிப்படையில் நிர்வாக வசதிக்காக மேலும் 5 மாவட்டங்கள் புதிதாக  தொடங்கப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  அறிவித்திருந்தார். அதன்படி, 33-வது மாவட்டமாக தென்காசியும், 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சியும் தொடங்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று ஒரே நாளில் 2 மாவட்டங்கள் புதிதாக தொடங்கப்பட்டன. 35-வது மாவட்டமாக திருப்பத்தூரும், 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டையும் உதயமாகின. அறிவிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் கடைசியாக செங்கல்பட்டு மாவட்டம் இன்று உதயமானது.

இதற்கான விழா செங்கல்பட்டு வேண்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று மதியம் நடைபெற்றது.  முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

Next Story