மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,660 கனஅடி


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,660 கனஅடி
x
தினத்தந்தி 18 Dec 2019 3:08 AM GMT (Updated: 18 Dec 2019 3:08 AM GMT)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,660 கனஅடியாக உள்ளது.

சேலம்,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.  காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 37வது நாளாக 120 அடியாக நீடித்து வருகிறது.  இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் நீர்இருப்பு 93.4 டி.எம்.சி.யாக உள்ளது.  இதேபோன்று, அணைக்கு நீர்வரத்து 4,660 கனஅடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 4,400 கனஅடியாகவும் உள்ளது.

Next Story