உள்ளாட்சி தேர்தல் ; 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 27 மாவட்டங்களுக்கு விடுமுறை

உள்ளாட்சி தேர்தல் ; 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 27 மாவட்டங்களுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 24 Dec 2019 1:04 PM GMT (Updated: 24 Dec 2019 1:04 PM GMT)

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 27 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக  நடைபெறும். இதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். கிராம உள்ளாட்சி தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும்.

முதற்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். 2-வது கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் பேரும் வாக்களிக்க உள்ளனர்.  388  ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ந்தேதி நடைபெறும்.  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 27 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

Next Story