மாநில செய்திகள்

பெரியார் விருது குறித்து ஸ்டாலின் கேள்வி:தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிப்பு + "||" + Stalin's question on Periyar award:Father Periyar Award Notice to Senji Ramachandran

பெரியார் விருது குறித்து ஸ்டாலின் கேள்வி:தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிப்பு

பெரியார் விருது குறித்து ஸ்டாலின் கேள்வி:தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிப்பு
பெரியார் விருது அறிவிக்கப்படாதது குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், 2019ஆம் ஆண்டின் தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தந்தை பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு முன், சொந்தக் கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கியதைப் போல் இந்தாண்டு வழங்க ஆள் இல்லையா? அல்லது டெல்லி எஜமானர்களின் மனம் குளிர்வதற்காக தவிர்க்கப்பட்டுள்ளதா? என  திமுக ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் 2019ம் ஆண்டுக்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிக்கப்பட்டன. 

கபிலர் விருது - புலவர் வெற்றி அழகன், உ.வே.சா. விருது - வெ.மகாதேவன், கம்பர் விருது - முனைவர் சரஸ்வதி ராமநாதன், அம்மா இலக்கிய விருது - உமையாள் முத்து உள்ளிட்ட பல விருதுகள் அறிவிக்கப்பட்டன. 

2019ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது  முனைவர் க.அருச்சுனனுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த விருதுகளுடன் ரூ.1 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.ஜனவரி 9,10ஆம் தேதிகளில் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2019ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் விருது அறிவிக்கப்படாதது குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த விருது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆம்னி பஸ்களில் முன்பதிவு நிறுத்தம் -பஸ் சேவை தொடருமா? என்பது இன்று முடிவாகிறது
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு சுமார் 1,700 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
2. வரும் 31 ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு விலக்கு: பள்ளிக்கல்வித்துறை
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை மார்ச் 31 வரை நிறுத்தப்பட்டுள்ளது.
3. தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் - சென்னை செசன்சு கோர்ட்டு ‘சம்மன்’
மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் சிறந்த முறையில் நிர்வாகம் செய்து வரும் மாநிலங்களில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது.
4. திருச்சியில் பா.ஜனதா நிர்வாகி வெட்டிக்கொலை தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
திருச்சியில் பா.ஜனதா நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
5. தமிழக அரசின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய பொன்மாணிக்கவேலுக்கு அவகாசம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தமிழக அரசின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய பொன்மாணிக்கவேலுக்கு அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.