மாநில செய்திகள்

மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் முதல்வர் பழனிசாமி உறுதி + "||" + Closed factories Open again Government will take action - Chief Minister Palanisamy confirmed

மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் முதல்வர் பழனிசாமி உறுதி

மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் முதல்வர் பழனிசாமி உறுதி
மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
சென்னை

சென்னை தரமணியில் டிஎல்எஃப் நிறுவனத்தின் கட்டுமான பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசும் போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தொழில் தொடங்குவதற்கான ஒற்றை சாளர முறைக்கு நல்ல  வரவேற்பு உள்ளது. மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

தமிழகத்தில் தொழில்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. 69 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 80,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

டி.எல்.எஃப் நிறுவனத்தின் முதலீடு மூலம் தகவல் தொழில்நுட்ப துறையில் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தூத்துக்குடியில் அமையவுள்ள நவீன சுத்திகரிப்பு ஆலை மூலம் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் என கூறினார்.

நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர் எம்.சி. சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முதல்-அமைச்சர் பேச்சு
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று சேலத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
2. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதால், பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
3. சங்கத் தமிழ் போற்றும் தங்கத்தலைவி
இன்று(பிப்ரவரி 24-ந்தேதி) தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள். தமிழர்களின் நல்வாழ்வுக்கும், தமிழ் மண்ணின் உயர்வுக்கும் விடியல் தந்த ஓர் வீரத்தலைவியின் விலாசம் இந்த மண்ணிற்கு கிடைத்த நாள்!
4. நாசா விண்வெளி மையத்துக்கு செல்லும் நாமக்கல் மாணவிக்கு ரூ.2 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
நாசா விண்வெளி மையத்துக்கு செல்லும் நாமக்கல் மாணவிக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
5. ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் சுட்டிக்காட்டிய மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செயல்படுத்துவோம் - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிவிப்பு
மாவட்ட ரீதியான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சுட்டிக்காட்டிய மாற்றங்களையும், சீர்த்திருத்தங்களையும் ஆராய்ந்து விரைவில் செயல்படுத்துவோம் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.