13-ந்தேதி நடைபெற இருந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் 15-ந்தேதிக்கு மாற்றம்


13-ந்தேதி நடைபெற இருந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் 15-ந்தேதிக்கு மாற்றம்
x
தினத்தந்தி 10 Feb 2020 8:45 PM GMT (Updated: 2020-02-11T00:23:25+05:30)

13-ந்தேதி நடைபெற இருந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் 15-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை, 

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் 13-ந்தேதி(வியாழக்கிழமை) நடைபெற இருந்த மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டம் திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டம் 15-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த தகவல் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story