ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.6½ கோடி போதை மருந்து பறிமுதல்: மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை


ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.6½ கோடி போதை மருந்து பறிமுதல்: மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Feb 2020 11:00 PM GMT (Updated: 11 Feb 2020 10:51 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.6½ கோடி போதை மருந்து பொருட்களை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை, 

சென்னையில் இருந்து கூரியர் நிறுவனம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு போதை மருந்து கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலானாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது உடற்பயிற்சி செய்வதற்கான சைக்கிள் பாகங்களை கொண்ட பார்சல் பெட்டி ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்காக தயார் நிலையில் இருந்தது. அந்த பார்சல் பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த இரும்பு குழாயில் சுமார் 13 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட போதை மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த போதை மருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதை மருந்தின் மதிப்பு ரூ.6½ கோடி ஆகும்.

இந்த தகவல் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story