டெல்லியில் மேலாண்மை ஆணைய கூட்டம்: காவிரிநீர் பங்கீட்டில் தமிழகத்துக்கான நீரை வழங்க நடவடிக்கை - மத்திய அரசுக்கு, ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


டெல்லியில் மேலாண்மை ஆணைய கூட்டம்: காவிரிநீர் பங்கீட்டில் தமிழகத்துக்கான நீரை வழங்க நடவடிக்கை - மத்திய அரசுக்கு, ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Feb 2020 8:30 PM GMT (Updated: 23 Feb 2020 7:55 PM GMT)

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடவும், மேகதாதுவில் புதிய அணை கட்டாமல் இருக்கவும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை, 

டெல்லியில் காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 25-ந்தேதி(நாளை) நடைபெறுகிறது. கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்துக்கு குறிப்பாக இந்த மாதத்திற்கும், வருகின்ற கோடைகாலமான மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கும் காவிரி நீரை திறந்துவிடவும், மேகதாதுவில் புதிய அணை கட்டாமல் இருக்கவும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்குண்டான அறிவிப்பை காவிரிநீர் மேலாண்மை ஆணையம் இந்த கூட்டத்தில் உறுதிப்பட தெரிவிக்க வேண்டும். தமிழக அரசும் காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்துக்கான நீரை பெறுவதில் தொடர் நடவடிக்கை எடுத்து தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தொடர்ந்து செயல்பட்டு காவிரி நீர் பங்கீட்டில் முறையான, சரியான முடிவை எடுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய நீரை அம்மாநிலம் பெற்று பயன்பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story