15 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரிப்பு: நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை


15 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரிப்பு: நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Feb 2020 9:00 PM GMT (Updated: 26 Feb 2020 6:26 PM GMT)

நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

தமிழகத்தின் கிராமப்புறங்களில் நீரிழிவு நோய் கடந்த 15 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்து இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நகரங்களை போல கிராமங்களிலும் வாழ்க்கை முறை மாறியிருப்பது தான் இதற்கு முக்கிய காரணம் என்பது கசப்பான உண்மை.

நீரிழிவு நோய் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும்.

நீரிழிவு நோயின் பாதிப்புகள், அதை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள், உணவு கட்டுப்பாடுகள், யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story