மாநில செய்திகள்

மக்கள் ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இன்று அடைப்பு + "||" + TASMAC shops across Tamil Nadu are shutting down today

மக்கள் ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இன்று அடைப்பு

மக்கள் ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இன்று அடைப்பு
மக்கள் ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இன்று அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்திருந்தார்.

பிரதமரின் வேண்டுகோளுக்கு மாநில அரசுகள், திரைப்பட நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். அந்தவகையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை இன்று மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


டாஸ்மாக் கடைகள் அடைப்பு

இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார், அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் ஊரடங்கு தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனர் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தேவையான அறிவுறுத்தல்களை டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருக்கு பிறப்பிக்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனர், ‘எப்.எல்.-1’, ‘எப்.எல்.-11’ உரிமம் பெற்ற டாஸ்மாக் மது விற்பனை கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார். எனவே அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் டாஸ்மாக் மதுக்கடைகளை இன்று அடைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மது வாங்க கூட்டம்

டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு நேற்று பிற்பகலிலேயே வெளியானது. இதனால் மதுபிரியர்கள் நேற்று இரவு டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர். பெரும்பாலான கடைகளில் இரவு நேரங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது.

இன்றைய தினத்துக்கு தேவையான மதுபானங்களை குடிமகன்கள் வாங்கி இருப்பு வைத்தனர். இந்த மாதம் 31-ந்தேதி வரையிலும் டாஸ்மாக் பார்களை மூடுவதற்கு அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது - மத்திய மந்திரி ஹர்ஷவர்தன்
வளர்ந்த நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
2. கொரோனா பாதிப்பு நடவடிக்கை: ஊரடங்கால் உயிரிழப்பு கணிசமாக குறைக்கப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
கொரோனா பாதிப்பு நடவடிக்கையாக நடைபெறும் ஊரடங்கால் உயிரிழப்பு கணிசமாக குறைக்கப்பட்டது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
3. ஊரடங்கால் 29- லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு தவிர்ப்பு- மத்திய அரசு
இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 29- லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. கொரோனா ஊரடங்கால் 61 நாட்களுக்கு பிறகு சென்னையில் இருந்து 22 நகரங்களுக்கு விமான சேவை 25-ந் தேதி தொடங்குகிறது
கொரோனா ஊரடங்கால் 61 நாட்களுக்கு பின்னர் சென்னையில் இருந்து 22 நகரங்களுக்கு வருகிற 25-ந்தேதி முதல் விமான சேவை தொடங்குகிறது.
5. ஊரடங்கில் அடைக்கலம் கொடுத்த நண்பரின் மனைவி - குழந்தைகளுடன் ஓட்டம் பிடித்த நண்பன்
ஊரடங்கு காரணமாக, நண்பனுக்கு வீட்டில் இடம் கொடுத்த நிலையில், அந்த இளைஞன் நண்பனின் மனைவியுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.