கமல் வீடு தனிமைப்படுத்தப்பட்டதாக நோட்டீஸ் ஓட்டிய விவகாரம்- சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்


கமல் வீடு தனிமைப்படுத்தப்பட்டதாக நோட்டீஸ் ஓட்டிய விவகாரம்- சென்னை மாநகராட்சி ஆணையர்  விளக்கம்
x
தினத்தந்தி 28 March 2020 7:41 AM GMT (Updated: 28 March 2020 7:41 AM GMT)

கமல் வீடு தனிமைப்படுத்தப்பட்டதாக நோட்டீஸ் ஓட்டிய விவகாரத்தில் சிறிய தவறு நடந்துவிட்டதாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வீடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து நோட்டீஸ் ஒட்டியது. இதனால், கமல் மற்றும் அவரது கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முகவரியில் ஏற்பட்ட குழப்பமே இந்த சிறிய தவறுக்கு காரணம் என சென்னை மாகராட்சி மேயர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இனிமேல் இதுபோன்ற எந்த தவறும் நடக்காது என கூறியுள்ளார்.  

இதற்கிடையே,  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்றும்,  வரும் முன் தடுக்கும் நடவடிக்கையாக, கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருப்பதாக, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

அவரது வீட்டுக்கதவில், தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீஸ் ஒட்டிய மநாகராட்சி, சிறிது நேரத்தில் அகற்றியது.  இதை தொடர்ந்து கமல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மநகராட்சி நோட்டீஸ் ஒட்டிய முகவரியில், கடந்த சில ஆண்டுகளாக இல்லை என்றும், அந்த இடத்தில் மக்கள் நீதி மய்ய அலுவலம் செயல்பட்டு வந்ததாக கூறியுள்ளார். 

Next Story