மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: மு.க ஸ்டாலின் + "||" + DMK gave 1 crore to CM Relief fund for corono prevention works : MK Stalin

கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: மு.க ஸ்டாலின்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: மு.க ஸ்டாலின்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,

கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது என, அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (மார்ச் 30) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது. மேற்கண்ட நிதி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமி தமிழக பாஜக துணை தலைவராக நியமனம்
திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமி தமிழக பாஜக துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகளைசிறப்பு அலுவலர்-கலெக்டர் ஆய்வு
தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பு அலுவலர்-கலெக்டர் ஆய்வு நடத்தினர்.
4. தெர்மல் ஸ்கேனரை கூடுதல் விலைக்கு வாங்கியதாக ஸ்டாலின் பழி போடுகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்
தெர்மல் ஸ்கேனரை கூடுதல் விலைக்கு வாங்கியதாக சென்னை மாநகராட்சி மீது திமுக தலைவர் ஸ்டாலின் பழி போடுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
5. "பிரதமரின் நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும்" - ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் உறுதி
சீன எல்லை பிரச்சினையில் மத்திய அரசுக்கு திமுக துணை நிற்கும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.