தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கொரோனா நோய் பாதிப்பு - அதிகபட்சமாக ஈரோட்டில் 24 பேரை தாக்கியது


தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கொரோனா நோய் பாதிப்பு - அதிகபட்சமாக ஈரோட்டில் 24 பேரை தாக்கியது
x
தினத்தந்தி 30 March 2020 9:00 PM GMT (Updated: 30 March 2020 8:10 PM GMT)

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 67 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 24 பேரை இந்த நோய் தாக்கியுள்ளது.

சென்னை, 

நேற்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில், 14 மாவட்டங்களில் 67 பேரை கொரோனா நோய் தாக்கியுள்ளது. அதாவது, நேற்று ஒரு நாள் மட்டும் 17 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2-வது இடத்தில் தலைநகர் சென்னை இருக்கிறது. சென்னையில் 22 பேர் கொரோனா நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். அடுத்ததாக சேலம் மாவட்டத்தில் 6 பேரும், மதுரை மாவட்டத்தில் 4 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேரும், விருதுநகர், காஞ்சீபுரம், கோவை, திருப்பூர், தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து உள்ளனர். கொரோனா அறிகுறியுடன் 1,925 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 43,537 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 4,523 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,780 பேரும், திருச்சி மாவட்டத்தில் 2,622 பேரும், சிவகங்கை மாவட்டத்தில் 2,424 பேரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,348 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,168 பேரும், நாகை மாவட்டத்தில் 2,120 பேரும்,

திருநெல்வேலி மாவட்டத்தில் 2,110 பேரும், கடலூர் மாவட்டத்தில் 1,634 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 1,495 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 1,479 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 1,248 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 1,246 பேரும், மதுரை மாவட்டத்தில் 1,231 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 1,166 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 1,156 பேரும் என வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Next Story