மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை


மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை
x
தினத்தந்தி 15 May 2020 2:18 PM IST (Updated: 15 May 2020 2:18 PM IST)
t-max-icont-min-icon

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க சென்னை ஐகோர்ட் விதித்த தடைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில்  தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்,  சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.  

மேலும், ஒரு மாநிலத்தில் மது விற்பனை செய்வது தொடர்பான விதிகளை உருவாக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது. அதில் நீதிமன்றங்கள் தலையிட தேவையில்லை. எனவே, மதுபானம் விற்பனை தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பிறப்பித்த நிபந்தனைகள் அனைத்தையும் தளர்த்துவதாகவும் சுப்ரீம் கோர்ட்  தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 


Next Story