கச்சா எண்ணெய் விலை 35 டாலர் குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறையவில்லை ஏன்? கமல்ஹாசன் கேள்வி + "||" + Why has the price of petrol and diesel not halved when crude oil prices have fallen by $ 35? Kamal Haasan Question
கச்சா எண்ணெய் விலை 35 டாலர் குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறையவில்லை ஏன்? கமல்ஹாசன் கேள்வி
கச்சா எண்ணெய் விலை 35 டாலர் குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறையவில்லை ஏன்? கமல்ஹாசன் கேள்வி.
சென்னை,
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை சரி பாதியாக குறைந்திருக்கும் இந்த நேரத்திலும் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது மக்கள் மீதான சுமையை அரசே அதிகரிக்கும் செயல்.
கடந்த காலங்களில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வை சுட்டி காட்டி, உயர்த்தப்பட்ட எரிபொருள் விலையால், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் கூடவே அதிகரித்து இருந்தது.
பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலையும், பெட்ரோல் டீசலின் விலையை பெரிதும் சார்ந்துள்ளதால், பெட்ரோல், டீசல் மீதான விலைகுறைப்பு அத்தியாவசிய பொருட்களின் விலையையும் குறைந்து மக்களின் பொருளாதார சுமையை குறைக்கக் கூடும்.
ஆனால் அதற்கு மாறாக தொடர்ந்து விலையை உயர்த்திக் கொண்டே செல்லும் மக்கள் விரோத போக்கை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும்.
சராசரியாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 35 டாலர் குறைத்துள்ள இந்த சூழ்நிலையில், நம் பெட்ரோல், டீசல் விலையும் பாதியாக குறையவில்லை ஏன்?.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளுக்கு சமீபத்தில் சின்னங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தமிழகத்தில் அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்தது.