சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பது குற்றவாளிகளை தப்பிக்க செய்யும் முயற்சி - இந்திய கம்யூனிஸ்டு கருத்து


சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பது குற்றவாளிகளை தப்பிக்க செய்யும் முயற்சி - இந்திய கம்யூனிஸ்டு கருத்து
x
தினத்தந்தி 29 Jun 2020 7:49 PM GMT (Updated: 29 Jun 2020 7:49 PM GMT)

சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பது குற்றவாளிகளை தப்பிக்க செய்யும் முயற்சி என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யார்? என்பது உலகறிந்த செய்தி ஆகும். பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் உட்பட குற்றச்செயலில் ஈடுபட்ட அனைவரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும். தந்தை-மகன் இருவரையும் மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர், ரத்தம் வடியும் நிலையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தவிட்ட நீதித்துறை நடுவர், பலத்த காயங்களுடன் சிறையில் அடைத்த சிறை அலுவலர்கள் என அனைவரும் இந்த குற்றச் செயல்களுக்கு உடந்தையாக செயல்பட்டிருப்பதை மூடிமறைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடுவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இந்த வழக்கை ஐகோர்ட்டு கண்காணிப்பில் நேர்மையான அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தினால் போதுமானது என்ற நிலையில், முதல்-அமைச்சர் அவசர அவசரமாக வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பது விசாரணையை தாமதப்படுத்தி, குற்றவாளிகளை தப்பிக்க செய்யும் முயற்சியாக இருக்குமோ என்ற ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story