பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை சென்னை வருகிறது மத்தியக்குழு


பெங்களூருவில் இருந்து விமானம் மூலம்  நாளை மாலை சென்னை வருகிறது மத்தியக்குழு
x
தினத்தந்தி 7 July 2020 12:10 PM IST (Updated: 7 July 2020 12:10 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்ற்று அதிகரித்து வரும் நிலையில், நாளை மத்தியக்குழு சென்னை வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-ஆம் இடம் வகிக்கிறது.  இந்த நிலையில்,  கொரோனா நிலவரம் தொடர்பாக ஆலோசிக்க மத்தியக்குழு நாளை தமிழகம் வர உள்ளது.

பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை சென்னைக்கு வரும்  மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான குழு , முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர்,  சுகாதாரத்துறை செயலருடன் ஆலோசனை  நடத்த உள்ளது. 

Next Story