வேதா இல்லம் எங்களுடைய பூர்வீக சொத்து, அரசு செய்தது அத்துமீறிய செயல் - ஜெ. தீபா


வேதா இல்லம் எங்களுடைய பூர்வீக சொத்து, அரசு செய்தது அத்துமீறிய செயல் - ஜெ. தீபா
x
தினத்தந்தி 25 July 2020 11:48 AM GMT (Updated: 25 July 2020 11:48 AM GMT)

வேதா இல்லம் எங்களுடைய பூர்வீக சொத்து, அரசுடமையாக்குவதை எதிர்க்கிறோம்.சட்ட ரீதியாக மேல்முறையீடு செய்வோம் என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

சென்னை,

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை தமிழக அரசு அரசுடமையாக்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா செய்தியாளர்களுக்குப்பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேதா இல்லம் எங்களுடைய பூர்வீக சொத்து. அரசுடமையாக்குவதை எதிர்க்கிறோம்சட்ட ரீதியாக மேல்முறையீடு செய்வோம்
வருமானவரி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன.

சொத்துக்களை பராமரிக்கும் உரிமையை நீதிமன்றத்தில் கோரியிருந்தோம்.  வாரிசுகள் யாருமே இல்லை என்று அரசு அறிவித்தது எப்படி ? எங்களுடைய ஆட்சேபனைகள் எதுவும் ஏற்கப்படவில்லை. சட்ட ரீதியான போராட்டத்தில் எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.  வேதா இல்லத்தை முறைப்படி கையகப்படுத்தவில்லை. எந்த அடிப்படையில் வேதா இல்லத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது?

அரசு செய்தது அத்துமீறிய செயல் வீட்டின் மதிப்பை நிர்ணயித்ததை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இழப்பீடு என்று கூறியுள்ள தொகையை ஏற்றுக்கொள்ள முடியாது. வீட்டில் இருந்த பொருட்கள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியப்படுத்தவில்லை” என்றார்.


Next Story